கவுதம் மேனன் இயக்கத்தில் நடிப்பதா, லிங்குசாமி இயக்கத்தில் நடிப்பதா என்று பிரச்னை வந்தபோது கவுதம் மேனன் படத்தை ஒதுக்கிவிட்டு லிங்குசாமிக்கு ஓகே சொன்னார் சூர்யா.
மீண்டும் டபுள் இயக்குனர்களுக்கு ஒரே சமயத்தில் கால்ஷீட் தருவது பற்றிய பிரச்னையில் சிக்காமல் இருக்க முடிவு செய்திருக்கிறார் சூர்யா. இதனால் தனது அடுத்த படத்தை இப்போதே முடிவு செய்திருக்கும் அவர் வெங்கட்பிரபுவுக்கு கால்ஷீட் ஓகே செய்திருக்கிறார்.
பிரியாணி படத்தையடுத்து வெங்கட்பிரபு இயக்கும் படமான இதற்கு கல்யாண ராமன் என்று டைட்டில் வைக்க எண்ணி உள்ளனர். ஏற்கனவே இதே டைட்டிலில் கமல்ஹாசன் நடித்து பஞ்சு அருணாசலம் தயாரிப்பில் திரைக்கு வந்த படம் சூப்பர்ஹிட்டாக அமைந்தது.
எனவே தான் இயக்கும் படத்துக்கு அந்த பெயரை வைப்பதற்கு அனுமதி தரும்படி கமலிடமும், பஞ்சு அருணாசலத்திடமும் கேட்க முடிவு செய்துள்ளார் வெங்கட் பிரபு. இப்படத்துக்கு யுவன் சங்கர்ராஜா இசை அமைக்க உள்ளார்.
இது கமல் நடித்த கல்யாணராமன் படத்தின் ரீமேக்கா என்று விசாரித்தபோது, இதுவொரு மாடர்ன் கதை படமாக உருவாக உள்ளது. கமல் நடித்த படத்தின் ரீமேக் இல்லை என்று பதில் வந்தது.