புதுடில்லி : காங்., தலைவர், சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ரா பயணம் செய்த காரை முந்திச் சென்ற, டில்லி தொழிலதிபருக்கு, போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
சோனியாவின் மகள், பிரியங்காவின் கணவர், ராபர்ட் வாத்ரா. தொழிலதிபரான இவர், நேற்று முன்தினம் இரவில், டில்லியில், தன் காரில் சென்று கொண்டிருந்தார். சோனியா மருமகன் என்பதால், 'இசட்' பிரிவு பாதுகாப்பில் அவர் உள்ளார். இதனால், அவர் காரின் முன்னும், பின்னும், பாதுகாப்பு வீரர்கள், காரில் செல்வது வழக்கம்.
இந்நிலையில், சவுரவ் ரஸ்தோகி என்ற தொழிலதிபர், தன் காரில் வேகமாக சென்ற போது, ராபர்ட் வாத்ரா சென்ற காரை, முந்திச் சென்றார். இதை அறிந்த, வாத்ராவின் பாதுகாப்பு வீரர்கள், போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.சவுரவ் ரஸ்தோகியை சுற்றி வளைத்த, போக்குவரத்து போலீசார், அவருக்கு, அபராதம் விதித்தனர்.இதுகுறித்து, போலீசார் கூறும் போது, 'ராபர்ட் வாத்ரா காரை, முந்திச் சென்றதற்காக, அவருக்கு அபராதம் விதிக்கவில்லை. மோதுவது போல் வந்து, ஆபத்தான விதத்தில், வேகமாக முந்திச் சென்றதால் தான், அபராதம் விதித்தோம்' என்றனர்.