பட்டுராம் செந்தில் என்பவர் தயாரித்து டைரக்ட் செய்யும் படத்தின் பெயர் 'கற்பவை கற்றபின்'. மது, அபிநிதா, சந்தீப், தருணா என்ற நியூபேஸ்களுடன் சிங்கம்புலி, வாசுவிக்ரம் போன்றவர்களும் நடிக்கிறார்கள். திருச்சி, திருத்தணி, ஆந்திரா, ஊட்டி பகுதியில் 50 நாட்களில் படத்தை எடுத்து முடித்து திரும்பியிருக்கிறார்கள். இது தற்கொலைக்கு எதிரான படம் என்கிறார் டைரக்டர் பட்டுராம் செந்தில்.
மேலும் அவர் கூறியதாவது: நாட்டில் கொலையை விட தற்கொலைதான் அதிகமாக நடக்கிறது. மனித நாகரீகம் இவ்வளவு வளர்ந்த பிறகும், வாழ்வதற்கு ஆயிரம் வழிகள் தெரிந்த பிறகும் தற்கொலைகள் தொடர்வது வேதனையாக இருக்கிறது. அதைப் பற்றி ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த படத்தை எடுக்குறேன். தேக சுகத்துக்காக ஒருவன் தற்கொலை செய்து கொள்கிறான். தேச நலனுக்காக ஒருத்தன் தற்கொலை செய்து கொள்கிறான். இருவரும் மேல் உலகத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள். அப்படி சந்தித்தவர்கள் அவர்களின் தற்கொலைக்கு பிறகு உலகத்தில் என்ன நடக்கிறது என்று பார்க்கிறார்கள். அப்போதுதான் அவர்களுக்கு தெரிகிறது. நாம் தற்கொலை செய்து கொண்டதே வேஸ்ட் என்று.
தற்கொலைகள் எதையும் சாதித்து விடாது என்பதை சொல்லத்தான் இந்த கற்பனை கதை. ஒருவன் தற்கொலை செய்தால் மரணத்தின் மூலம் அவன் தப்பித்து விடுகிறான். ஆனால் அவனைச் சுற்றி இருப்பவர்கள் தினம் தினம் செத்து பிழைக்கிறார்கள். இந்த உண்மையை ஆணித்தரமாக முன் வைக்கிறோம் என்றார்.