RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

திமுகவில் ஒடுக்கப்படும் அழகிரி- ஓரங்கட்டப்படும் கனிமொழி- ஓங்கும் ஸ்டாலின் கை!!

From: 'விஸ்தாரம்'

POST 14/1/2014, 11:30 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
சென்னை: திமுகவில் மீண்டும் கலகக் குரல் வெடிக்கும் நிலை உருவாகியுள்ளது. திமுக பொருளாளர் ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி, கனிமொழி முகாம்களில் இருந்து எழும்பும் குரல்கள் ஆரம்பத்திலேயே ஒடுக்கப்படுவதால் மு.க. ஸ்டாலினின் கை ஓங்கியே இருக்கிறது.

மத்திய அரசில் இருந்து திமுக வெளியேறியது முதல் மு.க. அழகிரி அமைதியானார். அவர் மத்திய அமைச்சர் பொறுப்பில் இருந்துகூட தாமதமாகவே ராஜினாமா செய்தார். ஆனால் அப்போது இருந்தே காங்கிரஸுடன் கூட்டணி கிடையவே கிடையாது என்பதை மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக வலியுறுத்தி வந்தார்.

திமுகவின் பொதுக்குழுவில் யாரும் எதிர்பாராதபடி, காங்கிரசுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும் என்று ஒட்டுமொத்த ஸ்டாலின் ஆதரவாளர்களும் வலியுறுத்தினர். அப்பொதுக் குழுவில் அழகிரிக்கு ஆதரவாக பேசிய ஒரே ஒருவரும் எள்ளிநகையாடப்பட்டார். இறுதியாக ஸ்டாலின் விரும்பியபடியே காங்கிரசுடனான கூட்டணி முறிவுக்கு வந்தது.

கடந்த சில மாதங்களாக அழகிரி அரவமே இல்லாமல் இருந்தார். கனிமொழியும் கனத்த மெளனம் காத்தார். இதனால் ஸ்டாலின் கை ஓங்கியேதான் இருந்தது.

இந்த சூழலில் கடந்த சில நாட்களாக திமுகவில் மீண்டும் கலகக் குரல்கள் வெடிக்கத் தொடங்கின. "இனியொரு விதி செய்வோம்" என்ற தலைப்பில் "ஜனவரி 30-ல் திமுக பொதுக்குழு" என்று அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டிய சுவரொட்டியால் திமுக தலைமை அதிர்ச்சி அடைந்தது.

இதற்கு கண்டனம் தெரிவித்த திமுக தலைவர் கருணாநிதி, நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் நஞ்சு கலக்கும் செயல் இது என்று எச்சரித்திருந்தார். ஆனாலும் அசராத அழகிரி ஆதரவாளர்கள், ஜனவரி 30ந்- தேதியன்று அழகிரி பிறந்த நாள் வருவதால் மதுரை நகர் முழுவதும் சுவரொட்டிகளால் மிரட்டியிருந்தனர்.

அந்த சுவரொட்டி வாசகங்கள் பெரும்பாலும் மு.க.ஸ்டாலினை விமர்சிக்கும் வகையில்தான் அமைந்திருந்தன. இது ஸ்டாலின் தரப்பை கொந்தளிக்க வைத்ததாக சொல்லப்படுகிறது. இப்படி அழகிரி தரப்பு குடைச்சல் கொடுக்க கனிமொழியும் தம் பங்குக்கு புகைச்சலை ஊதிவிட்டதாக சொல்லப்படுகிறது.

கனிமொழியின் பிறந்த நாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதற்காக சென்னை நகரில் "திமுகவின் அடுத்த தலைவர் கனிமொழி" என்கிற தொனியில் போஸ்டர்கள் ஒட்டப்பட ஏகத்துக்கும் கடுப்பாகிப் போனார் ஸ்டாலின். ஏற்கெனவே கனிமொழியை அவரது பிறந்த நாளன்று ஓரங்கட்டும் வகையில்தான் நாளை கோயம்புத்தூரில் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டியிருக்கிறார் ஸ்டாலின்.

இதையும் மீறி கனிமொழி தரப்பு தடபுடலாக பிறந்த நாளை கொண்டாட முன்வருவதால் கனிமொழி ஆதரவாளரான சென்னை கேபிபி சாமியை கூப்பிட்டு தலைமை விசாரித்ததாம். இது கனிமொழிக்கும் சொல்லப்பட்டதாம்.

இப்படி அழகிரி, கனிமொழி இருவரும் ஸ்டாலினுக்கு எதிராக இணைந்து யுத்தம் நடத்த தொடங்கிவிட்டனர் என்று பேசப்பட்ட சூழலில்தான் மதுரை மாநகர திமுக கூண்டோடு கலைக்கப்பட்டிருக்கிறது. முதல் கட்டமாக மதுரை மாநகர் மாவட்ட திமுகவே கூண்டோடு கலைக்கப்பட்டு தற்காலிக பொறுப்புக் குழுவை திமுக பொதுச்செயலர் அன்பழகன் நியமித்துள்ளார். இது அழகிரியின் ஆதரவாளர்கள் மீதான நடவடிக்கையாக இருந்தாலும் கனிமொழிக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.

நாளை கனிமொழி தரப்பு எப்படி பிறந்த நாளை கொண்டாடுகிறது என்பதையெல்லாம் பார்த்துவிட்டு அந்த முகாமுக்கும் அதிர்வேட்டு வைக்கப்படலாம் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆக ஸ்டாலினுக்கு எதிராக துரும்பு அசைந்தாலும் கிள்ளி எறியப்படும் என்பதுதான் திமுகவின் விதியாகிறது...



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT