RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

நாடு திரும்பினார் தேவயானி

From: 'விஸ்தாரம்'

POST 111/1/2014, 7:00 am

விஸ்தாரக் கள்ளி

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
விசா மோசடி மற்றும் தவறான தகவல்களைக் கூறியது ஆகியவை தொடர்பாக இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே மீதான குற்றச்சாட்டுகளை அமெரிக்க நீதிமன்ற நடுவர்கள் குழு முறைப்படி ஏற்றுக் கொண்டு, பதிவு செய்தது.

நாடு திரும்பினார் தேவயானி Devyan10

இந்நிலையில், தேவயானி வெள்ளிக்கிழமை இரவு தாயகம் திரும்பினார்.

அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே(39), தனது வீட்டு பணிப்பெண் சங்கீதா ரிச்சர்டுக்கு விசா பெற்றுத் தந்ததில் முறைகேடு செய்ததாக நியூயார்க் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் அவரைக் கைவிலங்கிட்டு கைது செய்தனர்.

அவரது ஆடைகளை நீக்கி சோதனை செய்யப்பட்டதாக வெளிவந்த தகவலால் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்த விவகாரத்தால், இந்திய-அமெரிக்க உறவுகளில் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் தேவயானி, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவருக்கு சட்டரீதியிலான பாதுகாப்பு அளிக்கும் வகையில் அவரை ஐ.நா.வுக்கான இந்தியத் தூதரக அதிகாரியாக மத்திய அரசு நியமித்தது.

இந்நிலையில், தேவயானி மீதான விசா மோசடி மற்றும் தவறான தகவல்களைக் கூறியது ஆகிய குற்றச்சாட்டுகளை அமெரிக்காவின் 23 நடுவர்கள் அடங்கிய குழு (கிராண்ட் ஜூரி) வெள்ளிக்கிழமை முறைப்படி ஏற்றுக் கொண்டு பதிவு செய்தது. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து நீடிக்கும் என்றும் அறிவித்தது.

இந்த நடுவர்கள் குழு வெளியிட்ட 21 பக்க அறிக்கையில், "அமெரிக்க சட்டப்படி, வீட்டுப் பணிப்பெண்ணுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தையும், மற்ற பாதுகாப்புகளையும் வழங்க தேவயானி விரும்பவில்லை. பணிப்பெண்ணுடன் போலியான ஒப்பந்தம் செய்து கொண்டார்' என்பவை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

"தேவயானி மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட மாட்டாது' என்று அமெரிக்க அரசு ஏற்கெனவே பிடிவாதமாகக் கூறியிருந்த நிலையில், நடுவர்கள் குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க அரசின் அட்டார்னி பிரீத் பராரா, மாவட்ட நீதிபதி ஷீரா ஷிண்ட்லினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

தேவயானி மீதான குற்றச்சாட்டுகள் நீடிக்கும். இப்போது இந்தியா புறப்பட்டுள்ள அவர், தூதர்களுக்கான சட்டப் பாதுகாப்பு இல்லாத நிலையில் அமெரிக்கா திரும்பினால் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதிமன்றத்துக்கு வந்து பதிலளிக்குமாறு தேவயானியை அழைக்கவோ, அவரை நீதிமன்றத்துக்கு கொண்டுவரவோ தேவையில்லை. அவருக்கு மிகச் சமீபத்தில்தான் முழுமையான சட்டப் பாதுகாப்பு அளிக்கப்பட்டது என்பதைப் புரிந்து கொண்டுள்ளோம் என்று அந்தக் கடிதத்தில் பிரீத் பராரா தெரிவித்துள்ளார்.

வழக்குரைஞர் கருத்து: தேவயானியின் வழக்குரைஞர் டேனியல் அர்ஷாக் கூறுகையில், ""தேவயானிக்கு தூதருக்கான முழுமையான சட்டப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதால் அவர் அமெரிக்காவுக்கு வெளியே பயணிக்க முடியும். எனவே அவர் இந்தியா திரும்புகிறார்.

அவரது பயண உரிமையை அமெரிக்க மத்திய நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. தாயகம் திரும்புவதில் தேவயானி மகிழ்ச்சி அடைந்துள்ளார். உண்மை வெளிவருவதை உறுதிப்படுத்துவதை எதிர்நோக்கியுள்ளார். தேவயானி தவறான எந்தத் தகவலையும் கூறவில்லை. தனது வீட்டுப் பணிப்பெண்ணுக்கு என்ன ஊதியம் வழங்க வேண்டுமோ அதை அவர் வழங்கி வந்துள்ளார்.

தேவயானியின் வீட்டு பணிப்பெண் குறுகிய கால ஒப்பந்தத்திலேயே அமெரிக்கா வந்தார். தனது பணிக்காலம் முடிவடைந்ததும் அவர் இந்தியா திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனினும், தவறான தகவல்கள் மற்றும் மோசமான புலன்விசாரணையின் விளைவாக, பணிப்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் தற்போது அமெரிக்காவில் நிரந்தர தங்கும் வசதியைப் பெற்றுள்ளனர்.

இந்த விவகாரத்தில் உண்மைகளை முழுமையாக புலனாய்வு செய்யாததன் மூலம் அமெரிக்கப் புலனாய்வு அதிகாரிகள் மிகப்பெரிய தவறுகளைச் செய்துள்ளனர். அவர்கள் இழைத்த தவறுகளுக்கான ஆதாரங்களை அளிப்பது குறித்துப் பரிசீலித்து வருகிறோம்'' என்று தெரிவித்தார்.

"குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை': இந்நிலையில், தாயகம் திரும்புவதற்காக தேவயானி, அமெரிக்காவில் விமானம் ஏறினார். அப்போது அவர் பிடிஐ செய்தியாளரிடம் கூறுகையில், ""எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தவறானவை, அடிப்படை ஆதாரமற்றவை. அவை தவறானவை என்று நிரூபிக்கப்படுவதை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்.

இந்த வழக்கில் நானும், இந்திய அரசும் எடுத்த நிலைப்பாடே சரியானது என்பது இறுதியில் நிரூபணமாகும். மேலும், இந்த விவகாரம் எனது குடும்பத்தின் மீது, குறிப்பாக இன்னமும் அமெரிக்காவிலேயே இருக்கும் என் குழந்தைகள் மீது எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் இருக்க உறுதிபூண்டுள்ளேன்.

இக்கட்டான சூழ்நிலையில் எனக்கு ஆதரவாக நின்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை மற்றும் மற்ற துறைகளில் உள்ள என் சக அதிகாரிகள், ஒட்டுமொத்த அரசியல் தலைவர்கள், ஊடகங்கள், இந்திய மக்கள் என அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன்'' என்று தெரிவித்தார்.

விமான நிலையத்தில் வரவேற்பு: இதனைத் தொடர்ந்து யுனைட்டெட் ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் மூலம் தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு தேவயானி வந்து சேர்ந்தார். அவருக்கு விமான நிலையத்தில் தேவயானியின் தந்தை உத்தம் கோப்ரகடே உள்ளிட்ட குடும்பத்தாரும் வெளியுறவுத் துறை அதிகாரிகளும் உணர்ச்சிர்பூர்வமான வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உத்தம் கோப்ரகடே, ""எனது மகள் தேவயானி கவலை கொள்ளவில்லை. நன்றாக இருக்கிறார். அவருக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என்று கூறினார்.

அமெரிக்க துணை தூதர் வெளியேற உத்தரவு: இந்தியா பதிலடி

புது தில்லி, ஜன. 10: விசா மோசடி வழக்கில் இந்தியத் துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்பட்டதற்கு பதிலடியாக, இந்தியாவிலுள்ள அமெரிக்க துணைத் தூதர் ஒருவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்தியா உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் இந்தியாவிலிருந்து பணிப்பெண் குடும்பத்தாரை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றது உள்பட தேவயானிக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை அந்த அதிகாரி முன்னின்று நடத்தியதாகக் கூறப்படுகிறது.

பெயர் வெளியிடப்படாத அந்த அதிகாரி இந்தியாவை விட்டு வெளியேற 48 மணி நேர அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

கைது வாரண்ட்: அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன், ஜன. 10: இந்தியா திரும்பியுள்ள தேவயானி கோப்ரகடேவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்படலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறியதாவது: ""தேவயானிக்கு இனிமேல் தூதரக முறையிலான சட்டப் பாதுகாப்பு இல்லை.

அமெரிக்காவில் இருந்து அவர் புறப்படும் முன்பு, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜராகவில்லை எனில், அமெரிக்கா திரும்ப அவருக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்பதை அவருக்கும், இந்திய அரசுக்கும் தெரியப்படுத்திவிட்டோம்.

தேவயானியின் பெயர் இனிமேல் விசா மற்றும் குடியேற்ற நடைமுறைகளில் தேடப்படும் நபரின் பட்டியலில் இடம்பெறும். அவரைக் கைது செய்வதற்கான வாரண்ட்டும் பிறப்பிக்கப்படலாம்'' என்றார்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT