சென்னை: மலையாளத்தில் நீலதாமர என்ற படத்தில் முதன்முதலாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தனது திரைப்பட பயணத்தை தொடங்கினார் நடிகை அமலா பால்.
மைனா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை அமலா பால். சிந்து சமவெளி படம் ஏற்படுத்திய சர்ச்சைகளை மறக்கடித்து, அமலா பாலை நடிக்கத் தெரிந்த நடிகை என்ற பெருமையைப் பெற்றுத் தந்தது மைனா.
அதனைத் தொடர்ந்து, அமலா பால் நடித்த வேட்டை, தெய்வத் திருமகள் மற்றும் தலைவா போன்ற படங்கள் மூலம் பிரபலமானார். தற்போது தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனது திருமணம் குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
தமிழ் படத்தில் நான் நடித்த முதல் படம் கிராமத்து கதையை அடிப்படையாக கொண்டு இருந்தது. அதற்காக நான் அதிகமாக மகிழ்ச்சி அடைந்தேன். அதனை தொடர்ந்து கிராமத்து வேடங்களில் நடிப்பதற்கு பல வாய்ப்புகள் வந்தன. ஆனால், ஒரே மாதிரியான வேடங்களில் நடிக்க நான் விரும்பவில்லை.
அது பெரிய பட்ஜெட், சிறிய பட்ஜெட் அல்லது வர்த்தக ரீதியிலான படமாகவோ இருப்பது குறித்து எனக்கு கவலையில்லை. வேறுபட்ட கதாபாத்திரங்கள் கொண்ட படங்களில் நடிக்கவே நான் விரும்புகிறேன். நான் செல்லும் பாதை சரியானதென்றே உணர்கிறேன்.