சென்னை: திமுகவுக்கு எதிராக செயல்பட்டால் யாராக இருந்தாலும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது வழக்கமான ஒன்றுதான் என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
திமுகவில் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. அழகிரிக்கும் இளைய மகன் மு.க. ஸ்டாலினுக்கும் இடையேயான அதிகாரப் போட்டி உச்சகட்டத்தை அடைந்தது. இதில் மு.க. அழகிரி நேற்று திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
இது குறித்து சென்னை விமான நிலையத்தில் மு.க. ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் நேற்று இரவு கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஸ்டாலின், அழகிரி மீது கட்சி எடுத்துள்ள நடவடிக்கைக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதுபோல், கட்சியில் பல முறை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது சகஜம் தான். அழகிரி நீக்கத்தால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. அத்துடன் தனிப்பட்ட முறையில் எனக்கும் அழகிரிக்கும் எந்த பிரச்னையும் கிடையாது என்றார்.