சென்னை: திமுகவில் இருந்து தென்மண்டல அமைப்புச்செயலாளர் மு. க. அழகிரி தற்காலிகமாக நீக்கப்பட்டதைத் தொடர்ந்து தென்மாவட்டங்களை சேர்ந்த அக்கட்சி நிர்வாகிகள் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.
திமுகவில் கலகக் குரல் எழுப்பிய மு.க. அழகிரி நேற்று கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தென் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் உடனடியாக சென்னைக்கு வந்தனர்.
சென்னையில் சிஐடி காலனி இல்லத்தில் திமுக தென் மாவட்ட நிர்வாகிகளான சுரேஷ்ராஜன், திண்டுக்கல் ஐ. பெரியசாமி, தளபதி, கருப்பசாமி பாண்டியன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், சேடப்பட்டி முத்தையா மூக்கையா உள்ளிட்டோர் கருணாநிதியை சந்தித்தனர்.
அழகிரி மீதான நடவடிக்கையைத் தொடர்ந்து திடீரென தென் மாவட்ட நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக சென்னையில் முகாமிட்டிருப்பதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று சந்தித்தாலும் இன்று கட்சி தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தென் மாவட்ட நிர்வாகிகளுடன் கருணாநிதி முக்கிய ஆலோசனை நடத்தக் கூடும் எனத் தெரிகிறது.