சிம்புவுடனான காதல் குறித்து பேச விரும்பவில்லை என்றும், கொஞ்ச காலத்துக்கு அமைதி காக்கப் போவதாகவும் ஹன்சிகா தெரிவித்துள்ளார்.
சிம்புவும், ஹன்சிகாவும் ஒருவரையொருவர் காதலிப்பதாக சில மாதங்களுக்கு முன் பகிரங்கமாக அறிவித்தனர்.
ஆனால் அந்த அறிவிப்பு வந்த வேகத்திலேயே இருவருக்கும் பெரும் பிணக்கு வந்துவிட்டது. காரணம், பழைய காதலியான நயன்தாராவுடன் சிம்பு மெனக்கெட்டு மீண்டும் ஜோடி சேர்ந்ததுதான்.
இதை தான் விரும்பவில்லை என்று வெளிப்படையாகவே சொன்னார் ஹன்சிகா. ஆனாலும் அதை கேட்கிற மூடில் இல்லை சிம்பு. நயனுடன் மீண்டும் நெருக்கம் காட்ட முனைவதாக அவரைப் பற்றி செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
சிம்புவுடன் காதல் முறிந்து விட்டதா என்று ஹன்சிகாவிடம் கேட்டபோது, "இப்போதைக்கு அமைதியாக இருக்கவே விரும்புகிறேன். காதல் பற்றி பேச விரும்பவில்லை. நேரம் வரும் போது இதுபற்றி பேசுவேன்," என்றார்.
வாலு படத்தில் நயன்தாரா வேண்டாம், ஆண்ட்ரியா வேண்டாம் நீ தான் என் டார்லிங் என்று ஹன்சிகாவை பார்த்து சிம்பு பாடுவது போல் பாடல் காட்சி வருகிறதாம். படம் வெளியாகும்போது இந்தப் பாட்டு இருக்குமா என்பது சந்தேகம்தானாம்!