ஒரு ஹீரோ என்றாலே படம் முழுக்க நல்லவராகவே நடிக்க வேண்டும். கைக்கு இருபது பேரை பந்தாட வேண்டும். கதாநாயகியை துரத்தும் வில்லனை கடாசி விட்டு, இவர் கட்டிப்பிடித்து டூயட் பாட வேண்டும். இதெல்லாம் காலம் காலமாக சினிமா உலகில் கடைபிடிக்கப்பட்டு வரும் கதை பார்முலாக்கள்.
ஆனால், ரசனைகள் மாறிக்கொண்டு வரும் இன்றைய காலகட்டத்தில் அந்த பார்முலாக்களை கடந்து படங்கள் வெற்றி பெறத் தொடங்கியுள்ளன. அதனால்தான், நல்லவனாகவே நடித்துவந்த அஜீத், இப்போது நெகடீவ் ரோல்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். குறிப்பாக, மங்காத்தா படத்திலிருந்து தனது ட்ராக்கை மாற்றியிருக்கும் அவர், அப்படத்தில் நானும் எத்தனை நாளைக்குத்தான் நல்லவன் மாதிரியே நடிக்கிறது என்று டயலாக் பேசிக்கொண்டு வில்லத்தனமாக நடித்திருந்தார். அதையடுத்து ஆரம்பம் படத்திலும் அதை தொடர்ந்தார்.
இந்தநிலையில், அஜீத்துடன் மங்காத்தாவில் நடித்ததால்தானோ என்னவோ இப்போது த்ரிஷாவுக்கும், அஜீத் பாணியில் நெகட்டீவ் ரோல்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை மேலோங்கியுள்ளது. இதை சில டைரக்டர்களிடம் கூறி வரும் த்ரிஷா, 12 வருசமாக மரத்தை சுற்றி டூயட் பாடி எனக்கு போரடிச்சுப்போச்சு. அதனால ஒரு மாறுதலுக்காக மாறுபட்ட நெகட்டீவ் வேடங்களில் நடிக்க எனக்கு சான்ஸ் கொடுங்கள் என்று தனது மனநிலையை வெளிப்படுத்தி வருகிறார்.