சென்னை: காங்கிரஸ், பாஜகவுடன் போல திமுகவுடனும் தேமுதிக கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. திமுக அணியில் தங்களுக்கு 15 லோக்சபா தொகுதிகள் ப்ளஸ் 2 ராஜ்யசபா இடம் வேண்டும் என்று தற்போது தேமுதிக டிமாண்ட் வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
லோக்சபா தேர்தலில் அதிமுக அணியில் இடதுசாரிகள் இடம்பெறுவது உறுதி. அந்த கட்சிகளுக்கு தலா ஒரு இடம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
காங்கிரஸ் கட்சி நட்டாற்றில் விடப்பட்ட கதையாக தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அந்த கட்சிக்கு இருக்கும் ஒற்றை நம்பிக்கையே தேமுதிகதான். ஆனால் தேமுதிக அவ்வளவு எளிதில் பிடி கொடுப்பதாகவும் இல்லை
ஆனால் பாஜகவோ, மதிமுக- பாமக ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளது. தேமுதிகவையும் விட்டுவைக்காமல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
திமுக அணியில் விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம்பெறுவது உறுதியாகி உள்ளது. மனித நேய மக்கள் கட்சியும் திமுக அணியில் இடம்பெறலாம் என தெரிகிறது. அதே நேரத்தில் தேமுதிகவை எப்படியும் வளைத்துவிடுவது என்று திமுகவும் கங்கணம் கட்டிக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்துகிறது.
திமுக அணியில் தேமுதிக 19 தொகுதிகள் கேட்பதாக முதலில் கூறப்பட்டது. இதற்கு திமுக தரப்பிலோ 7 லோக்சபா தொகுதி ப்ளஸ் ஒரு ராஜ்யசபா இடம் கொடுக்கலாம் என்று சொல்லப்பட்டதாம்.
இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் 19 தொகுதிகளில் இருந்து இறங்கி வந்திருக்கும் தேமுதிக இப்போது 15 லோக்சபா தொகுதிகளுடன் 2 ராஜ்யசபா இடம் கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருக்கிறதாம்.
தேமுதிகவின் இப்புதிய டிமாண்ட் குறித்தும் தீவிரமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். விரைவில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை, திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்திப்பார் என்றும் அப்போது கூட்டணி உறுதியாகும் என்றும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.